விளாத்திகுளத்தில் நோய் தடுப்பு முகாம்

விளாத்திகுளம், அக். 10:  விளாத்திகுளத்தில் அரசு மருத்துவமனை சார்பில் மழைக்கால நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம், நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது. விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு சின்னப்பன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார், விளத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் தமிழமுதன், விளாத்திகுளம் பஞ்சாயத்து செயல் அலுவலர் தனசிங் முன்னிலை வகித்தனர். மழைக்காலத்தில் ஏற்படும் நோய்கள். தடுக்கும் வழிமுறை, நிலவேம்பு கசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. இதையடுத்து நிலவேம்பு கசாயத்தை சின்னப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்.  முகாமில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்தா மருந்தாளுநர் தமிழ்ச்செல்வி, மருத்துவமனை நிர்வாக பிரிவு உதவியாளர் முருகன், சமூக ஆர்வலர் மாரியப்பன் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: