ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டி கருத்தரங்கம்

கடையம், அக். 10:  ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆட்சிப்பணி  மற்றும் தேர்வாணைய தேர்வுகளுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் நடந்தது. ஆழ்வார்குறிச்சி  பரமகல்யாணி கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டி பிரிவு சார்பில்  கல்லூரி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர்  வெங்கட்ராமன் தலைமை வகித்தார். அம்பை டிஎஸ்பி சுபாஷினி கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு இந்திய  ஆட்சிப்பணி தேர்வு, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தேர்வு உள்ளிட்ட  போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் முறை, நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளும்  முறைகள் குறித்து மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார். வணிகவியல் துறை  தலைவர் சிசுபாலன் வரவேற்றார். பேராசிரியர் ராம்நாதன் நன்றி கூறினார்.  நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

Tags : seminar ,Alivargurichi College ,
× RELATED தேர்வு எழுத பயந்து கூகுள் வீடியோ பார்த்து கையை முறித்துக்கொண்ட மாணவர்கள்