×

வாழைக்கன்று நடவு முறைகள் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

வி.கே.புரம், அக் 10: வி.கே.புரத்தில் வாழைக்கன்று நடவு பற்றி தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
தங்கப்பழம் வேளா ண்மை  கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தில் வி.கே.புரத்தில் விவசாயிகளுக்கு வாழை கன்று நடவு பற்றி செயல்விளக்கம் அளித்தனர். முன்னதாக வாழை கன்று நடும் பொழுது கவனிக்க வேண்டியவைகள் பற்றி எடுத்து கூறினார்.

ஆரோக்கியமான நூற்பு இல்லாத மக்கிய பகுதியை நீக்கி, கன்றின் அடிபகுதியிலிருந்து 20 செமீ பொய் தண்டினை வெட்டி எடுத்து விட வேண்டும். அடிப்பகுதியை 0.1 சதவீதம் கார்பென்டாசிம் கரைசலில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 5 பகுதி நீருடன் 4 பகுதி களிமண் கலந்து வைத்த கரைசலில் ஊற வைத்த வாழை கன்றின் அடிப்பகுதியை சீராக முழ்க வைத்து அதன் மீது கார்பபோயூரான் துகள்களை தூவ வேண்டும். பிறகு நிழலில் உலர்த்தி நட வேண்டும். இப்படி நட்டால் நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதம மந்திரி விருது பெற்ற அயன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயி இந்திரா கலந்து கொண்டார். மாணவர்கள் அழகு ரமேஷ், வெங்கடேஸ்வரன், தினேஷ்குமார், அஜித், அஜய் செல்வா, சிவசண்முக பிரியன், தினேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : banana planting demonstration ,Agricultural College ,
× RELATED தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே...