×

பொன்னேரி துணை மின்நிலைய வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

சென்னை, அக். 10: பொன்னேரி துணை மின்நிலைய வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெறுகிறது.இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை மின் பகிர்மான வட்டம்/ வடக்கு, பொன்னேரி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நாளை (11ம் தேதி) காலை 10 மணியளவில் பொன்னேரியில் உள்ள துணைமின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர்/இயக்கம் மற்றும் பராமரித்தல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பொன்னேரி கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் இந்த குறைதீர்க்கும் நாளில் பங்கு பெற்று பயனடையலாம்.

Tags : Ponneri Sub Power Station ,
× RELATED தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா?.....