×

பழைய காரை விற்று மோசடி

சென்னை, அக். 10:  சென்னை விருகம்பாக்கம் ஸ்டேட் பேங்க் காலனி 3வது தெருவை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன் (53). தொழிலதிபர். இவர், தனது சொகுசு காரை விற்பனை செய்ய முடிவு செய்தார்.அதன்படி கடந்த மாதம் 1ம் தேதி விருகம்பாக்கம் பகுதியில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வரும் செவ்வாபேட்டையை ேசர்ந்த பிரேம்குமாரிடம் சொகுசு காரை கொடுத்துள்ளார்.அவர், காரை விற்பனை செய்துவிட்டு கார் விற்பனை செய்யவில்லை என்று கூறி ஏமாற்றி வந்துள்ளார்.இதையடுத்து சிவராமகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு ெசய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பழைய கார் வாங்கி விற்பனை செய்து வரும் பிரேம்குமார் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED நீட் மோசடி வழக்கில் இருவருக்கு நிபந்தனை ஜாமீன்