×

மகா வல்லப கணபதி ஆலயத்தில் நவராத்திரி நிறைவு

திருவள்ளூர், அக்.10: திருவள்ளூர், ஜெயா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா வல்லப கணபதி ஆலயத்தில் நவராத்திரி விழாவை யொட்டி   கொலு வைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும்,  சொற்பொழிவுகளும் நடைபெற்றது. நேற்று முன்தினம் நவராத்திரி நிறைவு விழா மற்றும் விஜயதசமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை யொட்டி  அருள்மிகு துர்க்கை அம்மனுக்கு விசேஷ ஹோமம், அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அருள்மிகு சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பிறகு நோட்டு புத்தகங்கள், எழுதுகோல் ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். மேலும்,  மழலையர்கள் நெல்லில் “அ” எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு மழலையர்களுக்கு நோட்டுப்புத்தகம், எழுதுகோல் ஆகியவற்றை வழங்கினர்.

Tags : Maha Vallabha Ganapathi Temple ,
× RELATED புழல் சுற்றுவட்டார சாலைகளில்...