×

ரவுடி தரின் தம்பி கொலையில் வேலூர் நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

காஞ்சிபுரம், அக்.10: காஞ்சிபுரத்தை அடுத்த திருப்பருத்திக்குன்றம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடசனின் 2வது தம்பி கருணா (எ) கருணாகரன் (32). காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பைனான்ஸ் வைத்து நடத்தி வந்தார். காஞ்சிபுரத்தை கலக்கிய பிரபல ரவுடி தரின் சித்தப்பா மகன்.நேற்று முன்தினம் மாலை பைனான்ஸ் அலுவலகத்தில் கருணாகரன் இருந்தார். அப்போது சுமார் 6 மணியளவில் பைக்குகளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள், பைனான்ஸ் அலுவலகத்தில் இருந்த கருணாகரன், அங்கிருந்த விக்கி (எ) விக்னேஷ் ஆகியோரை அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

புகாரின்படி தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.இந்நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் (25), மணிகண்டன் (21), காந்தி (23), துளசிராமன் (22), விஜி (20) ஆகியோர், நேற்று வேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 5 பேரும் வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

Tags : court ,Vellore ,Rowdy Oudhar ,
× RELATED வேலூரில் ஒருதலைக்காதலால் பரபரப்பு...