×

தின்பண்ட குடோனில் திடீர் தீ விபத்து

கூடுவாஞ்சேரி, அக். 10: வண்டலூர் அருகே, சிறுவர்கள் சாப்பிடும் தின்பண்டங்கள் இருந்த குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் சண்முகா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (32). அதே பகுதியில் சிறுவர்கள் சாப்பிடும் தின்பண்டங்களுக்கான குடோன் வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வேலை முடிந்ததும் சத்தியநாராயணன், குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.சிறிது நேரத்தில் குடோனில் இருந்து திடீரென புகை வந்தது. பின்னர் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சத்தியநாராயணனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் அவர் அங்கு விரைந்து வந்தார்.தகவலறிந்து, தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, குடோனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதற்குள், அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின. அதன் மதிப்பு ₹30 லட்சம் என கூறப்படுகிறது. புகாரின்படி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : fire ,
× RELATED நீலகிரி மாவட்டம் அருகே தீக்குளித்த...