×

மாநில அளவிலான டேக் வாண்ேடா போட்டி

காஞ்சிபுரம், அக். 10: மாநில அளவிலான டேக் வாண்ேடா போட்டியில், ஒட்டு மொத்த கோப்பையை வென்று காஞ்சிபுரம் அணி முதலிடம் பிடித்தது.டேக் வாண்ேடா கலையின் 13வது மாநில அளவிலான  போட்டிகள் சமீபத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த  பி. முட்லூரில் மாநில டேக் வாண்ேடா சங்க பொது செயலாளரும், இந்தியாவின் மூத்த பயிற்றுனருமான பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தன.இதில், தமிழகம் முழுவதும் இருந்து 350 பேர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பயிற்றுநர் கதிரவன் தலைமையில் 61 பேர் பங்கேற்றனர். இதில் 29  தங்கம், 32 வெள்ளி,16 வெண்கல பதக்கங்களை பெற்று காஞ்சிபுரம் மாவட்ட அணி ஒட்டு மொத்த கோப்பையை வென்றது. சேலம் மாவட்டம் 2ம் இடமும், கடலூர் மாவட்டம் 3ம் இடமும் பிடித்தது.

ஒட்டு மொத்த கோப்பையை வென்ற காஞ்சிபுரம் மாவட்ட அணியினருக்கு பாராட்டு விழா நேற்று முன்தினம் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட டேக் வாண்ேடா சங்க தலைவர் சேகரன் தலைமையில் நடந்தது. பொது செயலாளர் கதிரவன் வரவேற்றார். மாவட்ட டேக் வாண்ேடா சங்க துணைத் தலைவர் குட்டி (எ) ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஜே. எழிலன் வாழ்த்துரை வழங்கினார்.மாவட்ட டேக் வாண்ேடா சங்க தலைவர் சேகரன், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி, மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டினால் ரத்த ஓட்டம் சீராகும், தன்னம்பிக்கை வளரும், உடல் வளமும் மனவளமும் நன்றாக இருக்கும் என ஊக்கவுரையாற்றினார்.பரணிதரன், அறிவரசி, தமிழ்வாணன், கணேஷ், பரத், சரத்குமார், கமலக்கண்ணன், கண்ணன் உள்பட பல  பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tag Waneda Competition ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...