×

வலங்கைமானில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்த சாலைமறியல் போராட்டம் வாபஸ்

வலங்கைமான், அக்.10: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த தொழுவூர் கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் முதல்வராக தமிழரசன் உள்ளார். இந்நிலையில் கல்லூரி முதல்வர் உணவு பொருள் கொள்முதல் செய்வதை தானே ஏலம் எடுத்து விற்பனை செய்வதாகவும், கல்லூரிக்கு தேவையான மேஜை உள்ளிட்ட பொருட்களை தமக்கு சொந்தமான கடையில் கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், மாணவர் சேர்க்கையின்போது அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும், கல்லூரியில் பயிலும் மாணவர்களை பார்க்க வரும் பெற்றோர்களை அவர்கள் முன்னிலையில் இழிவாக பேசப்படுவதாகவும் கல்லூரி முதல்வர் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறிவருகின்றனர்.

மேலும் தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பொறுப்புகள் தீர்மானிப்பதற்கு பதிலாக தமக்கு வேண்டியவர்களை பணியில் நியமித்துள்ளார். எனவே வலங்கைமான் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை கண்டித்தும், அதற்கு உடந்தையாக இருக்கும் கல்லூரி முதல்வர் தமிழரசன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று (10ம் தேதி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி எதிரே கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் சாலைமறியல் போராட்டம் மாவட்ட செயலாளார் சுந்தர மூர்த்தி தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் இஞ்சாசிராஜ் தலைமையில் போராட்டக்காரர்களுடன் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் சாலைமறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Marxist ,Communist Party ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலுக்கான...