டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி, அக்.10: திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு மருத்துவமனையின் ஆயுஸ் பிரிவு மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து பெண்களுக்கான விழிப்புணர்வு மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியை குமுதம் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சின்னதுரை வரவேற்றார். அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருத்துவர் அனுஷா மற்றும் மருத்துவர் சுப்புலட்சுமி இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பற்றி மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வழங்கினர். நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மருத்துவர்கள் நிலவேம்பு கஷாயம் வழங்கினர். செயலர் கவியரசன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED சோழவந்தானில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி