×

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

முத்துப்பேட்டை, அக்.10: முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு முத்துப்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா தலைமை வகித்து தற்காப்பு கலை பயிற்சியைத் தொடங்கி வைத்தார், ஆசிரியர் பயிற்றுநர் சக்திவிநாயகம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் முருகேசன் பெண்களுக்கான தற்காப்பு கலை பயிற்சியின் அவசியத்தைப் பற்றி பேசினார். இதில் ஆசிரியர்கள் முருகையன், பிரபாகரன், கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து தற்காப்பு கலை பயிற்சி ஆசிரியர் மகேந்திரன், மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். பட்டதாரி ஆசிரியர் துரைராசு வரவேற்று பேசினார். ஆசிரியை பொற்செல்வி நன்றி கூறினார்.

Tags : school children ,
× RELATED கொரோனாவை விரட்ட விதவிதமான...