×

ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பு அரசு அலுவலகங்களில் ஓட்டுனர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்

திருவாரூர், அக்.10: திருவாரூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அரசு ஓட்டுநர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் மாவட்ட தலைவர் வன்னியநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பாலமுருகன், மாநில பொருளாளர் இக்பால், பாஷா, மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் புதிய மாவட்ட தலைவராக மீண்டும் வன்னியநாதன், மாவட்ட செயலாளராக முருகானந்தம், பொருளாளராக முத்துராமன் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் மாவட்டத்தில் அரசுதுறை ஊர்தி ஓட்டுநர் சங்க கட்டிடத்திற்கு என இடம் ஒன்றை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கி தரவேண்டும், மேலும் மாவட்டத்தில் அரசு துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச் செயலாளர் குருமூர்த்தி நன்றி கூறினார்.

Tags : drivers ,government offices ,
× RELATED தமிழக அரசு அலுவலகங்களில் புதிய...