×

இலுப்பூர் பொன்வாசிநாதர் கோயிலில் நவராத்திரி விழாவில் அம்பு போடும் நிகழ்ச்சி

இலுப்பூர். அக்.10: இலுப்பூர் பொன்வாசி நாதர் மற்றும் பெருமாள் கோயிலில் நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியை யொட்டி நேற்று அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலுப்பூர் பகுதியில் உள்ள கோயில்களில் கடந்த மாதம் 29ம் தேதி முதல் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இலுப்பூரில் உள்ள அலர் மேல்மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில், சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோயில், இரட்டை பிள்ளையார் கோயில் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள கோயில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோயில்களில் சுவாமி தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். வீட்டில் பெண்கள் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தினர். நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியை யொட்டி நேற்று முன்தினம் இலுப்பூர் பெருமாள் கோயில் மற்றும் பொன்வாசி நாதர் கோயில் விஜயதசமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேங்களும், பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் மாலை சிறப்பு அலங்காரத்தல் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். அதை தொடர்ந்து குதிரை வாகனத்தில் சுவாமி மங்கள இசையுடன் இலுப்பூர் முக்கிய வீதியின் வழியே சென்று இலுப்பூர் அருகே உள்ள வௌ்ளியங்குடி பகுதியில் உள்ள குளத்தில் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.

Tags : Arrow making ceremony ,Ponnavasinathar Temple ,Iluppur ,
× RELATED மாதாந்திர பராமரிப்பு பணி எதிரொலி...