பொதுமக்கள் வலியுறுத்தல் புதுக்கோட்டை மாவட்ட பொதுவிநியோக திட்ட நுகர்வோர் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை,அக்.10: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை மறுநாள் (12ம் தேதி) பொதுவிநியோகத்திட்டம் தொடர்பான நுகர்வோர் பாதுகாப்பு குறை கேட்புக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: பொதுவிநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் 2ம் வாரத்தில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட குறைகேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்துக்கான பொது விநியோகத்திட்ட குறைகேட்புக் கூட்டம் நாளை மறுநாள் (12ம் தேதி) நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை வட்டம் குளவாய்ப்பட்டி, ஆலங்குடி வட்டம், மணியம்பலம், திருமயம் வட்டம் ராயவரம், குளத்தூர் வட்டம் மண்டையூர், இலுப்பூர் வட்டம் வெட்டுக்காடு, கந்தர்வக்கோட்டை வட்டம் அண்டனூர், அறந்தாங்கி வட்டம் வேங்கூர், ஆவுடையார்கோவில் வட்டம் அமரடக்கி, மணமேல்குடி வட்டம் கிளாரவயல், பொன்னமராவதி வட்டம் மேக்கினிப்பட்டி, கறம்பக்குடி வட்டம் முள்ளங்குறிச்சி (வடக்கு), விராலிமலை வட்டம் பூதகுடி ஆகிய கிராமங்களில் இக்கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Grievance Meeting ,Pudukkottai District Public Distribution Plan Consumer ,
× RELATED குறைதீர் கூட்டம்