சீரமைக்க கோரிக்கை துணை தாசில்தார் பணியிடம் நிரப்ப கோரி கைகளில் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட அலுவலர்கள்

கறம்பக்குடி, அக்.10: துணைதாசில்தார் பணியிடம் நிரப்ப வலியுறுத்தி கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர். கோர்ட் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் காலியாக உள்ள துணை தாசில்தார் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் வருவாய்த்துறையினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில், துணை தாசில்தார் பணியிடம் நிரப்ப கோரி தாசில்தார் வில்லியம் மோசஸ் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து நேற்று பணியில் ஈடுபட்டனர். இதில் தேர்தல் துணை தாசில்தார் குமரப்பன், மலையூர் வருவாய் ஆய்வாளர் சசி குமார் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் வருவாய் துறையினர், தாலுகா அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஊத்துக்கோட்டை அரசு...