கந்தர்வகோட்டை அருகே மோட்டார் வயர் திருடிவிற்ற இருவர் கைது

கந்தர்வகோட்டை, அக்.10: கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் வயல்வெளியில் உள்ள மோட்டாரிலிருந்து காப்பர் வயர்களை திருடி விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியை சேர்ந்தவர் சூசை மகன் தேவதாஸ்(48). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் விளைநிலத்தில் விவசாய பணிக்காக மோட்டார் அமைத்துள்ளார். அதிலிருந்த காப்பர் வயர்களை அப்பகுதியை சேர்ந்த வசந்தா என்பவரின் கணவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த நாகராஜ் (32) மற்றும் அவரது கூட்டாளி ரஞ்சித்(22) ஆகியோர் திருடி விற்றுள்ளனர்.

இதுகுறித்து தேவதாஸ் கொடுத்த புகாரின்பேரில் கந்தர்வகோட்டை எஸ்ஐ சுந்தரமூர்த்தி வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 10 கிலோ காப்பர் வயர்களையும், திருட பயன்படுத்தி பைக்கையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Gandharvagoda ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் 2 பேர் கைது