×

திருவண்ணாமலையில் விண்வெளி வார விழா கற்பனை திறனை மாணவர்களிடம் கொண்டு வரவேண்டும் கலெக்டர் பேச்சு

திருவண்ணாமலை, அக்.10: கற்பனை திறனை மாணவர்களிடம் கொண்டு வரவேண்டும் என திருவண்ணாமலையில் நேற்று நடந்த விண்ெவளி வார விழாவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசினார்.உலக விண்வெளி வாரம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை உலகம் முழுவதும் உள்ள விண்வெளி நிறவனங்களால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருவை மையமாக வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த வருடம் உலக விண்வெளி வாரம் கருவாக `நிலவு-கோள்களின் வாசல்'' என்ற தலைப்பில் நடத்தப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த ஆண்டும் அதன் பல்வேறு நிலையங்களில் உலக விண்வெளி வாரம் கொண்டாடி வருகிறது.

அதன்படி, இந்தாண்டு திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் இஸ்ரோ மையம், அருணை பொறியியல் கல்லூரி சார்பில் நேற்று உலக விண்வெளி வார விழா, கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த விழா தொடர்ந்து இன்றும் நடைபெறுகிறது.கல்லூரி செயலாளர் எம்.புர்கிந்த்ராஜ் தலைமை தாங்கினார். மேலாளர் ஆனந்தராஜ் வரவேற்றார். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்முறையாக உலக விண்வெளி வார விழா, கண்காட்சி 2 நாட்கள் நடைபெறுகிறது.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மாணவர்களிடம் கனவு காணுங்கள் என்று கூறினார். அப்துல்கலாம் இந்திய விண்வெளி ெதாழில்நுட்பத்தை உலகளவில் எடுத்துசென்ற பெரிய மகான். இஸ்ரோ விஞ்ஞானிகள் அவர்களின் கனவு நனவாகும் வகையில் தங்கள் பணியை விரும்பி செய்து வருகிறார்கள்.இன்றைய போட்டி உலகில் மற்றவர்களை காட்டிலும் நாம் தனித்து எப்படி இருக்க வேண்டும் என பணியாற்றவேண்டும். அப்படி பணியாற்றினால் மாணவர்களுக்கு வரும் காலத்தில் சிறந்தமேடை காத்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக ஸ்ரீஹரிகோட்டா இஸ்ேரா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் ஆர்.வெங்கட்ராமன் பேசுகையில், ‘செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிகள் செய்ய உலக நாடுகள் 52 முறை செயற்கைக்கோள் அனுப்பி முயற்சி மேற்கொண்டது. அதில் 14 முறைதான் வெற்றி பெற்றது. ஆனால் இந்தியா முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது.இஸ்ேரா தலைவர் சிவன் யாரும் எடுக்காததை எடுத்து முயற்சி செய்பவர். அவரது குறிக்கோள் மிகப்பெரியது. நிலவின் தென்துருவம் குறித்து ஆராய்ச்சி செய்ய அனுப்பபட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் விக்ரம்லேண்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இந்த முயற்சியில் மீண்டும் இறங்கி அடுத்த ஆண்டுக்குள் வெற்றி பெறுவோம்'' என்றார்.தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பேரன் ேஷக்தாவூத், அருணை பொறியியல் கல்லூரி முதல்வர் எல்.ெஜயக்குமார், உபகுழுதலைவர் பி.முனிரத்தினம் உள்பட பலர் பேசினர்.

முடிவில் கன்வீனர் ராஜேஷ் நன்றி கூறினார்.முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலக விண்வெளி வார விழிப்புணர்வு நடைபயணத்தை முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ேஜ.அப்துல்கலாமின் பேரன் ஷேக்தாவூத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும், கல்லூரி வளாகத்தில் நடந்த கண்காட்சியில் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ேரா மையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ராக்கெட் மற்றும் செயற்கைகோள் மாதிரிகள், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் இஸ்ரோவின் சாதனைகள் அடங்கிய படங்களும் வைக்கப்பட்டிருந்தன

விழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாறுவேடப்போட்டி, வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி ெபறுபவர்களுக்கு பரிசுகளை பிரமோஸ் ஏவுகணை நாயகன் சிவதாணுபிள்ளை இன்று வழங்குகிறார்.இதில் வினாடி- வினா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இறுதி சுற்று நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இறுதி போட்டிகளில்் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்த முறை ராக்கெட் ஏவுகணை செலுத்தும் நிகழ்வை நேரடியாக காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Space Talk Festival ,Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலையில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு