×

திருவண்ணாமலையில்வாலிபரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி 2 பேருக்கு வலை

திருவண்ணாமலை, அக்.10: திருவண்ணாமலை ராம்ஜி நகரை சேர்ந்தவர் மாதேஷ்(21). இவர் திருவண்ணாமலை அருணகிரிபுரத்தை சேர்ந்த மோகன் என்பவது டெக்ரேஷன் கடையில் வேலை பார்த்து வந்தார். மோகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த தரணி, அருண் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம்  இருந்து வந்தது.

இந்நிலையில், மாதேஷ் நேற்று முன்தினம் திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தரணி, அருண் ஆகிய இருவரும் மாதேஷை பார்த்து ஆபாசமாக திட்டியதுடன், கத்தியால் கழுத்தில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ேசர்த்தனர்.இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் நேற்று முன்தினம் மாதேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள தரணி, அருண் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags : Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலையில் 8 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி