×

தண்டராம்பட்டு அருகே மனுநீதிநாள் முகாமில் 112 பேருக்கு நலத்திட்ட உதவி

தண்டராம்பட்டு, அக்.10: தண்டராம்பட்டு அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் 112 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.தண்டராம்பட்டு அடுத்த சே.கூடலூர், காம்பட்டு, வரகூர், சேர்பாப்பட்டு, வாக்கிலாப்பட்டு, பொன்வயல், கிளியாப்பட்டிணம், மோட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 182 பேர், கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு தாசில்தார் நடராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இந்நிலையில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் சே.கூடலூர் கிராமத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். இதில் 112 பேருக்கு முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், தாசில்தார் நடராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வெங்கடேஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலர் செந்திலகுமார், ஆர்ஐ சின்னப்ப ராஜ், விஏஓக்கள் பொற்செல்வன், வெங்கடாசலம், சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : persons ,Dandarambattu ,nephew camp ,
× RELATED திருவள்ளூரில் புதிதாக இன்று 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி