×

திருவண்ணாமலையில் எஸ்ஐயிடம் தகராறு செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை, அக்.10: திருவண்ணாமலையில் எஸ்ஐயிடம் தகராறு செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவி. இவர். கடந்த மாதம் 18ம் தேதி காஞ்சி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த, ஆடையூர் கிராமத்தை சேர்ந்த தேவதாஸ்(34) என்பவர், சப்- இன்ஸ்பெக்டர் ரவியிடம் தகராறு செய்தார். மேலும், கத்தியை காட்டி மிரட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவதாசை கைது செய்தனர். விசாரணையில், அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சிபிசக்கரவர்த்தி பரிந்துரை செய்தார். அதன்பேரில், தேவதாஸை ஓராண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கந்தசாமி நேற்று உத்தரவிட்டார்.

Tags : Thiruvannamalai ,SI ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று