ஆரணியில் ₹31.62 லட்சத்தில் கட்டப்பட்டதுபயன்பாடின்றி பாழடைந்து வரும் காவலர்கள் குடியிருப்பு வரிப்பணம் வீணடிப்பு என மக்கள் வேதனை

ஆரணி, அக்.10: ஆரணியில் ₹31.62 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாடின்றி பாழடைந்து வரும் காவலர் குடியிருப்பால் மக்கள் வரிப்பணம் வீணடிப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆரணி கோட்டை வீதி கைலாசநாதர் கோயில் பின்புறம், அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்குவதற்கான காவலர் குடியிருப்பு ₹31.62 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2017ம் ஆண்டு காவல் நிலையம் அருகில் இன்ஸ்பெக்டர், சப்-இஸ்ன்பெக்டர்களுக்கு 2 காவலர் குடியிருப்பு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால், 2 ஆண்டுகளாகியும் அந்த குடியிருப்பில் காவலர்கள் யாரும் தங்காமல், அவர்களது சொந்த வீட்டிலும், வாடகை வீட்டிலும் தங்கி வருவதால், காவலர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகள் பாழடைந்து, முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.ஆனால், புதிதாக காவலர் குடியிருப்பு கட்டி திறப்பு விழா செய்த நாளில் இருந்து இதுநாள் வரை கட்டிடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இரவு நேரங்களில் பெண்கள் புகார் அளிக்க வந்தால் இன்ஸ்பெக்டர் இல்லை, நாளை காலை வந்து பாருங்கள் என காவலர்கள் திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் புகார் அளிக்க வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.மேலும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு பல லட்சம் மதிப்பில் குடியிருப்பு கட்டி கொடுத்தும், அதனை பயன்படுத்தாமல் பாழடைந்து வருகிறது. இதனால் வரிப்பணம் வீணாகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.அடிப்படை வசதிகள் இல்லை: போலீசார் வேதனை

Tags : guards ,building ,
× RELATED மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்