×

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிஆசிரியையை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி, அக்.10: ஆரணி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பள்ளி ஆசிரியையை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.ஆரணி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜக்கிளி மகன் பிரபாகரன்(30). இவர் வேலூரில் உள்ள தனியார் பைக் ஷோருமில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், பிரபாகரனும், ஆசிரியையும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பழகி வந்துள்ளனர். மேலும், திருமணம் செய்த கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஆசிரியையிடம் தனிமையில் இருந்ததால் அவர் கர்ப்பமானார்.

இதற்கிடையில், பிரபாகரனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இதையடுத்து, பிரபாகரன் ஆசிரியையை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரேகாமதி வழக்குப்பதிந்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தார்.இதற்கிடையில், ஆசிரியைக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது பெற்றோர் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : teenager ,
× RELATED காதல் திருமணம் ஒரு மாதத்திலேயே...