(வேலூர்) விஏஓ அலுவலகம் திறக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை ₹6.50 லட்சத்தில் கட்டப்பட்ட

ராணிப்பேட்டை, அக்.10: ராணிப்பேட்டை அருகே ₹6.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய விஏஓ அலுவலக கட்டிடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி நிதியில் ₹6.50 லட்சம் மதிப்பில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு புதிதாக விஏஓ அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை திறக்க எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் கட்டிடம் பழுதடைந்து சமூக விரோதிகளின் கூடாராகமாக மாறி வருகிறது.எனவே புதிய விஏஓ அலுவலகத்தை திறக்க வேண்டும் என லாலாப்பேட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>