ஆம்பூர் அருகே திருட்டு வழக்கில் வாலிபர் கைது

ஆம்பூர், அக்.10: குடியாத்தம் தாலுகா பரதராமியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது மனைவி சவானி(20). இவர் நேற்று முன்தினம்  மாலை பள்ளிகொண்டாவில் இருந்து பெங்களூருக்கு செல்லும் அரசு பஸ்சில் சென்றார். பஸ் மாதனூர் பஸ் நிலையம் வந்தபோது பஸ்சில் ஏறிய பெண் ஒருவர் சவானி அருகில் வந்து உட்கார்ந்தார். பின்னர், அவரிடம் பேச்சு கொடுத்தபடி அவரது பையில் வைத்திருந்த 4 சவரன் தங்க செயினை திருடிச்சென்றார்.

Advertising
Advertising

இதுகுறித்து, சவானியின் தாய் குடியாத்தம் தாலுகா, வீரசெட்டிபள்ளியை சேர்ந்த பாரதி ஆம்பூர் டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு வழக்கில் சம்பந்தபட்டவர்களின் புகைப்படங்களை காண்பித்தனர். அதில் ஒரு பெண் புகைப்படத்தை சவானி காண்பித்தார்.அவர் நரியப்பட்டியை சேர்ந்த பாரதி என தெரிந்தது. இதையடுத்து போலீசார் ஒரு ஜவுளி கடையில் இருந்த பாரதி மகன் அஜய்ரத்னம்(30) என்பவரை பிடித்தனர். அவரிடமிருந்த 4 சவரன் தங்க செயினை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பாரதியை தேடி வருகின்றனர்.

Related Stories: