×

ராஜாக்கமங்கலம் பன்றி வாய்க்காலில் மாயமான மாணவன் சடலமாக மீட்பு

ஈத்தாமொழி, அக். 10: நாகர்கோவில்  அருகே பழவிளை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு 2  மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் ஜெயபிரகாஷ்(12). தெற்கு சூரங்குடி  அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை  ராஜாக்கமங்கலம் அண்ணா காலனியில் உள்ள ஒரு இசக்கியம்மன் கோயிலில் இருந்து  பக்தர்கள் குலசேகரப்பட்டணம் கோயிலுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்காக  பாலகிருஷ்ணன், அவரது மகன் ஜெயபிரகாஷ், அவரது சகோதரர் மற்றும்  குடும்பத்தினர் இசக்கியம்மன் கோயிலுக்கு வந்தனர். மதியம் அந்த பகுதியில்  உள்ள 2 சிறுவர்களுடன், ஜெயபிரகாஷ் கோயில் பின்புறம் ஓடும்  பன்றிவாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அவர்கள் 3 பேருக்கும் நீச்சல்  தெரியாது. வாய்க்காலில் தண்ணீரின்  வேகம் அதிமாக இருந்தது.

அப்போது ஜெயபிரகாஷை தண்ணீர் இழுத்துச்சென்றது.  நாகர்கோவில் தீயணைப்பு வீரர்களும்  சம்பவ இடம் வந்து ஜெயபிரகாசை தேடினர். இரவு நேரம் ஆனதால் தேடுதல் பணி  நிறுத்தப்பட்டது. மீண்டும் நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் ஜெயபிரகாஷை தேடும்  பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் பன்றி வாய்க்காலில் சடலமாக மிதந்தார்.  தீயணைப்பு வீரர்கள் அவரது சடலத்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Rajkamangalam Pig ,student ,
× RELATED கொரோனாவால் மருத்துவமனை...