×

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண் கைது

திருக்கோவிலூர்,  அக். 10: திருக்கோவிலூர் அடுத்த துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்  குமார் மனைவி லதா (32). இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினரான செல்வம்  மனைவி அன்னபூரணி (49) என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.1  லட்சம் பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் லதா வீடு கட்டுவதற்காக  அன்னபூரணியிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு லதாவை அன்னபூரணி  தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த  லதா திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் லதா கொடுத்த புகாரின் பேரில்  போலீசார் வழக்கு பதிந்து அன்னபூரணியை கைது செய்தனர்.


Tags :
× RELATED பெண்ணிடம் வழிப்பறி