×

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருது

கடலூர், அக். 10: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வரும் டிசம்பர் 3ம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்பட உள்ளது.சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர் (கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் தொழுநோய் குணமடைந்தோர்) 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.     சிறந்த ஆசிரியர் (பார்வை திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்தல், 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.     சிறந்த சமூகப் பணியாளர் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.     மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.     மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம், 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.     

ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் (செவித்திறன் குறைந்தோருக்கு கற்பித்தல் சிறந்த ஆசிரியர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்) 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.     மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், நிறுவனங்கள் இதற்கான விவரங்களை மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம், 5, காமராஜர் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை- 5 அல்லது     என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளுமாறு  தெரிவிக்கப்படுகிறது.  விருதுக்கான விண்ணப்பங்கள் அனைத்து இணைப்புகளுடன் வரும் 16ம் தேதிக்குள் கடலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண். 113ல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED அமெரிக்க இந்தியருக்கு கண்டுபிடிப்பாளர் விருது