×

பெண் சாராய வியாபாரி தடுப்புக்காவலில் கைது

விழுப்புரம், அக். 10: மரக்காணம் அருகே பிரபல பெண் சாராய வியாபாரி தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்தவர் துரை மனைவி ரூபாவதி(53). பிரபல சாராய வியாபாரி. தொடர்ந்து இப்பகுதியில் சாராயம் கடத்துவது, விற்பனை செய்வது போன்ற தொழிலில் ஈடுபட்டு வந்தார். போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாலும் ஜாமீனில் வெளியேவந்து அவர் இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இவரது நடவடிக்கையை தடுக்கும்வகையில் தடுப்புக்காவலில் கைதுசெய்ய எஸ்பி ஜெயக்குமார் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் சுப்ரமணியன் அதற்கான உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மரக்காணம் போலீசார் ரூபாவதியை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

Tags : liquor dealer ,
× RELATED திருக்கோவிலூர் அருகே தேடப்பட்டு வந்த சாராய வியாபாரி அதிரடி கைது