×

அரசு துறை ஓய்வூதியர்களின் கோரிக்கை ஏற்பு தீபாவளி முன்பணம் வழங்க கருவூலத்துறை இயக்குனர் உத்தரவு

கடலூர், அக். 10:  தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில, மாவட்ட,  வட்ட நிர்வாகிகள்  மாநில செயலாளர் மனோகரன் தலைமையில் கடலூர் மாவட்ட கருவூல அலுவலரை  சந்தித்து ஓய்வூதியர் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை  முன்பணம் வழங்க வேண்டும்  என்ற கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் அவர், விண்ணப்பம் அளிக்கும் காலம்  முடிவடைந்து விட்டதால் கோரிக்கையை ஏற்க இயலாது என்பதை தெரிவித்தார்.

இதையடுத்து ஓய்வூதியர்கள் இது தொடர்பாக கருவூல இயக்குனரிடம் பேசி தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.அதனை ஏற்று கருவூல அலுவலர் உடனடியாக கருவூல இயக்குனரிடம் தொடர்புகொண்டு ஓய்வூதியர்களின் கோரிக்கையை தெரிவித்தார். அதனை ஏற்ற இயக்குனர்,   அனைவருக்கும் தீபாவளி பண்டிகை முன்பணம் உடன் வழங்க உத்தரவிட்டார்.இயக்குனர் உத்தரவின் பேரில் அக்டோபர் 15ம் தேதிக்குள் தீபாவளி பண்டிகை முன்பணம்  வழங்க விண்ணப்பங்களை அனுப்பி வைத்தால் பண்டிகை முன்பணம் வழங்கப்படுமென கருவூல அலுவலர், ஓய்வூதியர்கள் இடம் தெரிவித்தார்.முன்னாள் மாநில செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட தலைவர் காசிநாதன், மாவட்ட  பொருளாளர் குழந்தைவேலு, மாவட்ட துணை தலைவர் கருணாகரன், பாலு. பச்சையப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Treasury Department ,Diwali ,pensioners ,Government Department ,
× RELATED அதிகம் பாதிக்கப்பட்ட 8 மண்டலங்களில் 3000...