வேலூரில் பணியாற்றிய மாநகராட்சி பெண் அலுவலர் திருச்சிக்கு மாற்றம்

வேலூர்,: வேலூரில் பணியாற்றிய மாநகராட்சி பெண் அலுவலர் திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கணக்கு பிரிவில் மல்லிகா என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த 2017ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில் கமிஷனர் அறையில் இருந்து சுமார் ₹1.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் மல்லிகாவின் மேஜையில் இருந்து சுமார் ₹20 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அப்போது கமிஷனராக பணியாற்றிய குபேந்திரன் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல் பெண் அலுவலர் மல்லிகா மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே கணக்கு பிரிவில் இருந்து அதே அலுவலகத்தில் சத்துணவு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அரசு உத்தரவின் பேரில், திருச்சி மாநகராட்சிக்கு பெண் அலுவலர் மல்லிகா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertising
Advertising

Related Stories: