மணல் கடத்திய 2 பேர் கைது

திண்டிவனம், அக். 9: திண்டிவனம் உட்கோட்டம் ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓங்கூர், தாணாங்குப்பம், கடவம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மணல் கடத்தப்படுவதாக துணை கண்காணிப்பாளர் கனகேஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஒலக்கூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் கடவம்பாக்கம் ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றபோது ஆற்றில் 4 மாட்டு வண்டிகளை கொண்டு மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடினர். விரட்டி சென்ற போலீசார் இருவரை பிடித்தனர்.

Advertising
Advertising

பிடிபட்ட இருவர் மற்றும் நான்கு மாட்டு வண்டிகளை மணலுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு தாலுகா முகந்தகிரி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் ஏழுமலை(39), செய்யூர் தாலுகா எரவாநல்லூர் கிராமத்தை சேர்ந்த வெண்ணை மகன் ஏழுமலை(50) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா நெற்குணம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி, அதே ஊரை சேர்ந்த அய்யனாரப்பன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: