×

கஞ்சா விற்றவர் கைது

சுங்கரன்கோவில், அக். 4: சங்கரன்கோவில் அருகே உள்ள கீழநீலிதநல்லூரில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பனவடலிசத்தரம் எஸ்ஐ கதிர்காமு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜமீன்இலந்தைகுளம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரை மடக்கி சோதனையிட்டனர். இதில் அவரிடம் பொட்டலங்களாக 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர், ஜமீன்இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த செல்லகுமார் மகன் ஜெயப்பிரகாஷ் (19) என்பதும் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்ததுடன், கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்