×

திசையன்விளை நாங்குநேரியில் இன்று மின்தடை

நெல்லை, அக். 4:வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட கோட்டைகருங்குளம், திசையன்விளை துணை மின் நிலையங்களில் இன்று(4ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி தெற்குகள்ளிகுளம், திசையன்விளை, இட்டமொழி, கஸ்தூரிரெங்கபுரம், நாங்குநேரி, பாம்பன்குளம், திருவம்பலாபுரம், விஜயநாராயணம், துலுக்கர்பட்டி, குட்டம், மகாதேவன்குளம், உவரி, இடையன்குளம், அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, குமாரபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில்  இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை கோட்ட செயற்பொறியாளர் ராஜன்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கொரோனா ஊடரங்கு காலத்தில் நிர்வாண படம்...