×

பாளை. ஒன்றியத்தில் திமுகவினருடன் வாக்கு சேகரிப்பு மக்களுக்காக உழைக்க வாய்ப்பு தாருங்கள்

நெல்லை, அக். 4: மக்களுக்காக உழைக்க வாய்ப்பு தாருங்கள் என பாளை. ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்த நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வேண்டுகோள் விடுத்தார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். பாளை. ஒன்றியத்திற்கு உட்பட்ட மடத்துப்பட்டியில் நேற்று மாலை பிரசாரத்தை துவக்கிய ரூபி மனோகரன் மறுகால்தலை, ெபாட்டல்நகர், சீவலப்பேரி, சந்தைப்பேட்டை, கான்சாபுரம், நொச்சிகுளம், கீழ தோணித்துறை, கொம்பாந்தானூர், மருதூர், திருத்து, கீழப்பாட்டம், திருமலைக்கொழுந்துபுரம், மணப்படை வீடு, மேலப்பாட்டம், பாளையஞ்செட்டிகுளம், எம்ஜிஆர் நகர், அவினாப்பேரி காந்திநகர், பர்கிட்மாநகரம், நடுவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அந்த பகுதிகளில் ஊர் மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் தனது சொந்த செலவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தொகுதியில் அலுவலகம் அமைத்து மக்கள் குறைகளை தீர்த்துள்ளார். உங்களுக்காக மக்கள் பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். அனைத்து பகுதி பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வு காண்பேன். அதற்காக அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்பி, முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன், பாளை. ஒன்றிய திமுக செயலாளர் தங்கப்பாண்டியன், விவசாய அணி முன்னாள் அமைப்பாளர் போர்வெல் கணேசன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்கேஎம் சிவகுமார், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் கனகராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

Tags : Union ,DMK ,
× RELATED இ பாஸ் மூலம் மாவட்டத்தில் கொரோனா...