×

பாபநாசத்தில் தீப ஆரத்தி விழா

வி.கே.புரம், அக். 4: தாமிரபரணி ஆற்றில், கடந்த ஆண்டு அக்.11ம் தேதி முதல் 22ம் தேதி வரை 144 ஆண்டுகளுக்குப் பின் மகா புஷ்கர விழா நடந்தது. இதனைத் தொடர்ந்து அகில இந்திய துறவியர்கள் சங்க தாமிரபரணி மகா புஷ்கர குழு சார்பில் மாதந்தோறும் விசாக நட்சத்திரத்தன்று பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தீப ஆரத்தி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா நடந்து ஓராண்டு நிறைவு விழாவையொட்டி பாபநாசம் படித்துறை     தாமிரபரணி ஆற்றில் சிறப்பு தீப ஆரத்தி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தாமிரபரணி நதியை வணங்கி வழிபட்டனர்.முன்னதாக தாமிரபரணி ஆற்றில் பூக்களைவிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. யுகதர்ம கருடானந்த சுவாமி, பழனி சிவா சுவாமி, புஷ்கர குழு பொறுப்பாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Deepa Arathi Festival ,Papanasam ,
× RELATED 2 மாத இடைவெளிக்கு பின் பாபநாசத்தில் கரும்பு வெட்டும் பணி