ரயில் பயணி மாயம்

கோவை, அக்.4:ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ருபா உரா (55). இவர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ரப்பர் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த அவர் சொந்த ஊர் செல்வதற்காக கடந்த 28ம் தேதி ஆலப்புழாவில் இருந்து கோவை வழியாக தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். அவருடன உறவினர் மனுவேல் இருந்தார். 30ம் தேதி மதியம் ரயில் கோவை ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது மனுவேல் கீழே இறங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, ரூபா உராவை காணவில்லை. ரயில் பெட்டி மற்றும் ரயில் நிலையம் முழுவதும் தேடியும் ரூபா உரா கிடைக்கவில்லை. இது குறித்து மனுவேல் கோவை ரயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: