இடைப்பாடியில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

இடைப்பாடி, அக்.4:  இடைப்பாடி ஒன்றிய அலுவலகம் முன் உடைந்த குடிநீர் குழாய், தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது. இடைப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், கடந்த சில நாட்களாக ராசிபுரத்திற்கு செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி சாலையில் தேங்கியது. இது குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன், தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று மாலை பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி, உடைந்த கூட்டு குடிநீர் திட்ட குழாயை நகராட்சி பணியாளர்கள் சீர் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: