ஏஐடியுசி தொழிலாளர்கள் மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,  அக். 4:  வழுதாவூர் சாலையில்  உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு ஏஐடியுசி  மாநில செயலாளர் சேதுசெல்வம், சங்கத் தலைவர் அர்ஜூனன், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஏஐடியுசி செயல் தலைவர் தினேஷ் பொன்னையா போராட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  இதில் மாட்டு வண்டி தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் தண்டபாணி, பிரகாஷ்,  குமார், பாலு, ஆனந்த் உள்பட 40க்கும் மேற்பட்டோர் மாடுகளுடன் வந்து கலந்து  கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தை ஏஐடியுசி மாநில  தலைவர் தினேஷ் பொன்னையா முடித்து வைத்தார்.போராட்டத்தில் பங்கேற்ற  மாட்டு வண்டி தொழிலாளர்கள், மணல் அள்ள அரசு அனுமதி வழங்காததால் திருட்டு  மணல் விற்கப்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசுக்கு  வருமானத்தை உருவாக்கும் வகையிலும், மக்களுக்கு சிரமமின்றி மணல் கிடைக்கவும்  மணல் அள்ள அரசு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.
Advertising
Advertising

Related Stories: