பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வந்தவாசி, அக்.4: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தவாசியில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வந்தவாசியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளின் முன் நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி சங்கங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச திருவண்ணாமலை மண்டல பொருளாளர் எஸ்.பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

அப்போது, 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும், வழங்கப்பட்ட 2.44 ஊதிய உயர்விலும் மோசடி நடந்துள்ளதை களைய வேண்டும், கிரேடு பேவிற்கும் சர்வீசுக்கும் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும், 6 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ₹500 முதல் ₹4,000 வரை மோசடி நடந்துள்ளதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : State Transport Corporation ,
× RELATED ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை...