×

உதவித்தொகை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை, அக்.4: திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கக்கோரி நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சங்க நிர்வாகி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கிய காத்திருப்பு போராட்டம் மாலை வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாலுகா அலுவலக ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், உதவித்தொகைக்கான உத்தரவுகள் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், `குறைதீர்வு கூட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கேட்டு அளித்த விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் தனி கவனம் செலுத்துவதில்லை. கடந்த 2 ஆண்டுகளாக திருவண்ணாமலை ேகாட்ட அளவில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் அளித்த மனுக்கள், தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால், தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் எதுவும் நிலுவையில் இல்லை என்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் எங்கே போனது என்பது தெரியவில்லை. எனவே, நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, உதவித்தொகை வழங்க வேண்டும் என்றனர்.

Tags : Contributors ,
× RELATED அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும்...