குடந்தை மக்கள் அவதி மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி, அக். 4: பூதலூர் முனியாண்டவர் கோயில் அருகில் சிலர் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பதாக பூதலூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டபோது இருவர் மதுபாட்டில்கள் விற்று கொண்டிருந்தனர். விசாரணையில் திருக்காட்டுப்பள்ளி நடுப்படுகை சுரேஷ் மகன் மோகன்ராஜ் (19), ஒன்பத்துவேலி ராஜமாணிக்கம் (59) என்பது தெரியவந்தது. இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தார். இதேபோல் பூதலூர் கொடும்புரார் நகர் அன்பு மனைவி மஞ்சுளா (40), புங்கனூர் நடுத்தெரு ரங்கசாமி (47) ஆகியோர் தங்களது வீட்டின் பின்புறம் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றனர். இதையடுத்து இருவரையும் பூதலூர் போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: