×

பழநி அருகே மின் கம்பத்தில் பைக் மோதி பெண் பலி

பழநி, செப்.20:  பழநி அருகே நல்லூரில் மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் பெண் பலியானார்.  பழநி அருகே சாமிநாதபுரம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (40). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது மனைவி மகாலட்சுமி (28) உடன் பைக்கில் மானூருக்கு சென்று கொண்டிருந்தார். மானூர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரில் உள்ள மின்கம்பத்தில் பைக் மோதியது. இதில் தலையில் அடிபட்டு மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராமசாமி சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Palani ,
× RELATED பெண்ணிடம் வழிப்பறி