குஜிலியம்பாறையில் மரத்தை பிடுங்கியபோது காவிரி குடிநீர் குழாய் உடைப்பு கு மூன்று கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை பாதிப்பு

ஜிலியம்பாறை, செப்.20:  குஜிலியம்பாறை சாலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் தனிநபர் ஒருவர் வேரோடு பிடுங்கினார். இதில் மரம் சாய்ந்து விழுந்ததில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக பாளையம் பேரூராட்சி மற்றும் மூன்று கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குஜிலியம்பாறையை சேர்ந்தவர் செந்தில்குமார். குஜிலியம்பாறை மின்வாரிய அலுவலகம் அருகே திண்டுக்கல் செல்லும் சாலையில் இவருக்கு சொந்தமாக காலிமனையிடம் உள்ளது. இந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பெரிய தீக்குச்சி மரம் உள்ளது. இந்த இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்துள்ளார். அப்போது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தீக்குச்சி மரத்தை வேரோடு பிடுங்கியுள்ளார். மரம் சாய்ந்து விழுந்ததில் இச்சாலையில் உள்ள காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. பின்னர் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு காவிரி குடிநீர் நிறுத்தம் செய்யப்பட்டது. காவிரி குழாய் உடைப்பு காரணமாக பாளையம் பேரூராட்சி மற்றும் உல்லியக்கோட்டை, சின்னுலுப்பை, மல்லப்புரம் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து குஜிலியம்பாறை சாலை ஆய்வாளர் முருகன் குஜிலியம்பாறை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    அந்த புகாரில், திண்டுக்கல்-குஜிலியம்பாறை சாலை எஸ்ஹெச்-74 ஆய்வு செய்த போது 38/2ல் வலது பக்கம் தீக்குச்சி மரம் ஜேசிபி இயந்திரம் மூலம் வேரோடு பிடுங்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த போது, குஜிலியம்பாறையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஜேசிபி இயந்திரம் மூலம் தீக்குச்சி மரத்தை வேரோடு புடுங்கியது தெரியவந்தது. வடமதுரை நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் தினேஷ்பாபு அறிவுறுத்தலின்பேரில், அரசு விதிகளுக்கு புறம்பான இச்செயலை செய்த தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: