ஊட்டச்சத்து உணவு கண்காட்சி

பட்டிவீரன்பட்டி, செப்.20:  பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள குப்பிநாயக்கன்பட்டியில் ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சி  நடைபெற்றது. முகாமில் ஆத்தூர் வட்டார குழந்தைகள் ஊட்டச்சத்து திட்ட மேற்பார்வையாளர்கள் சாந்தி, சுமதி, பத்மாவதி, வட்டார திட்ட உதவியாளர் ஜெயஸ்ரீ, வட்டார ஒருங்கிணைப்பாளர் கௌசல்யா, சித்தரேவு ஊராட்சி செயலாளர் சிவராஜன் மற்றும் காந்திபுரம் தொகுதியில் உள்ள அய்யம்பாளையம், சிங்காரக்கோட்டை, பெரும்பாறை, சித்தரேவு, நெல்லூர் உட்பட 41 குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களும் கலந்து கொண்டனர். ஆத்தூர் வட்டார குழந்தைகள் ஊட்டச்சத்து திட்ட மேற்பார்வையாளர்கள் சாந்தி கூறுகையில், கருவுற்ற தாய்மார்களும், குழந்தை பெற்ற தாய்மார்களும் சத்தான ஊட்டச்சத்து உணவினை சாப்பிட்டால் தான் அது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். இதனை தாய்மார்கள் கடைபிடித்து குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

Advertising
Advertising

Related Stories: