மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

ஒட்டன்சத்திரம், செப்.20:  ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் சார் ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற்றது. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு, உதவித் தொகை, நலவாரியப்பதிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் ஆகியவற்றுக்கான மனுக்கள் பயனாளிடமிருந்து பெறப்பட்டது. ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான அம்பிளிக்கை, இடையகோட்டை, கள்ளிமந்தையம், ஜவ்வாதுபட்டி, மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சாமிநாதன், தாசில்தார் சரவணன், சமூகநல பாதுகாப்பு திட்ட தாசில்தார் லீலாரெஜினா உள்ளிட்ட வருவாய்துறையினர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: