×

மத நல்லிணக்க கந்தூரி விழா

மேலூர், செப். 20: மேலூர் அருகே, பூதமங்கலத்தில் முஸ்லீம் மற்றும் இந்து பொதுமக்கள் சார்பில் 30 ஆண்டுகளுக்கு பின், மதநல்லிணக்க கந்தூரி விழா நடந்தது. இதையொட்டி பூதமங்கலம் கண்மாயில் ஆடுகளை வெட்டி விருந்து வைத்தனர். இதில் அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டனர். விருந்துக்கு இந்துக்கள் சார்பில் 10 ஆடுகளும், முஸ்லீம்கள் சார்பில் 20 ஆடுகளும் வழங்கப்பட்டன. மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், சகோதரத்துவம் தழைக்க வேண்டி விழாவை கொண்டாடியதாக தெரிவித்தனர்.

Tags :
× RELATED ரம்ஜான் பண்டிகையால் இரக்கம்,...