தேசிய சிறார் நலத்திட்டத்தின் கீழ் 53 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி

மேலூர், செப். 20: தேசிய சிறார் நலத்திட்டத்தின் கீழ், ஆர்பிஎஸ்கே (ஸ்கூல் ஹெல்த்) என்னும் அமைப்பு சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு தொண்டை அடைப்பான், ரணஜன்னி (டி.டி) நோயை தடுக்க முன்னெச்சரிக்கை தடுப்பூசி கடந்த வாரம் முதல் போடப்படுகிறது.வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி அம்பலம் சிவனேசன் வழிகாட்டுதல்படி, ஆர்பிஎஸ்கே பிரிவு மருத்துவ அதிகாரி டாக்டர் பாலாஜி தலைமையில் தனிக்குழு இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலூர் நகர் மற்றும் 198 கிராமங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் 53 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலூர் மில்டன் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் நேற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் தடுப்பூசி போடப்பட்டது. இதில், மருந்தாளுநர் அய்யாதுரை, செவிலியர் ஜெயபாரதி ஆகியோர் கொண்ட குழு இப்பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: