மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வடமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ‘செல்பி’

போலீஸ் சோதனை என்னாச்சு?

மதுரை, செப். 20 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்பேரில், 2018 மார்ச் முதல் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை வைக்க 5 கோபுர வாசல்களில் பாதுகாப்பு அறை ஏற்படுத்தப்பட்டது. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அனைத்து கோபுர வாசலிலும் போலீசார் கடும் சோதனைக்கு பின்னர் பக்தர்களை உள்ளே அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கோயிலின் உள்ளே வடமாநிலத்தினர் பலர் செல்போன்களை உள்ளே கொண்டு வந்து ‘செல்பி’ எடுத்துக் கொண்டு இருந்தனர். இதனை அறிந்த ஊழியர்கள் போலீசாரின் சோதனையை மீறி, எப்படி செல்போன்களை உள்ளே எடுத்து வந்தீர்கள்? என கேட்டனர். அவர்கள் மொழி புரியாமல் விழித்தனர்.  இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘போலீசாரின் சோதனையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. கோயிலில் கவனக்குறைவாக பணியாற்றும் போலீசார் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: