×

ரயில்வே சுரங்கப்பாதையில் செயல்படாத மோட்டார் தண்ணீரில் தத்தளிக்கும் பொதுமக்கள்

பரமக்குடி, செப். 20: பரமக்குடியில் புதிதாக கட்டப்படுள்ள ரயில் சுரங்கபாதையில் தண்ணீரை வெளியேற்றும் மோட்டார் செயல்படாததால் தேங்கி நிற்கும் மழைநீரால் பொன்னையாபுரத்தை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகமும், ரயில்வே நிர்வாகமும் பாரா முகம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பரமக்குடியில் முதுகுளத்தூர் சாலை ரயில்வே பாதையை கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகமாக நடைபெற்ற வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சுந்தராஜன் முயற்சியால் 3 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டடு திறக்கப்பட்டது. இதனால், பொன்னனையாபுரம், அண்ணா நகர், பாலன்நகர் பகுதியைச் சோந்நதவர்கள் பாலத்தின் மீது ஏறி வரவேண்டியிருந்தது. பஸ் நிலையம், ஓட்டப்பாலம், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் ஒரு கி.மீ. தூரத்திற்கு பாலத்தின் மீது ஏறி சுற்றிவர வேண்டியுள்ளது. இதற்காக ரயில்வே நிர்வாகம் மற்றும் நகராட்சி இணைந்து பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனம், சிறிய வகையான வாகனங்கள் வந்து செல்வதற்கு ரயில்வே சுரங்கபாதை அமைக்கப்பட்டது. பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த ரயில்வே சுரங்கபாதையை கடந்த மாதம் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்ஙது வைத்தார்.

இதில் மழைநீர் தேங்கினால் வெளியேற்றுவதற்காக மோட்டார் அமைக்கப்பட்டது. இதை நகராட்சியிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒப்படைக்காமல் உள்ளனர். இதனால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. சிறிய மழைக்கு தேங்கும் நீரை நகராட்சி ஊழியர்கள் கையால் வெளியேற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் பெய்த மழையால் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதை வெளியேற்ற அமைக்கப்பட்ட மோட்டார் செயல்படாமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொன்னையாபுரம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் தேங்கியுள்ள தண்ணீரை கடக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பொதுமக்கள் சார்பாக நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகையால் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கும், இனிமேல், மழைநீர் தேங்காமல் உடனடியாக வெளியேற்ற மோட்டாரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதகுறித்து டிரைவர் செல்வம் கூறுகையில்” ரயில்வே சுரங்கபாதை அமைக்கும்போது மழை நீர் தேங்காமல் முறையான திட்டமிட்டு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக அதிகாரிகளிடம் கூறப்பட்டது. அதை கண்டு கொள்ளாமல் திட்டமிடுதல் இல்லாமல் பொயருக்கு கட்டிவிட்டுள்ளனர். முதல்வர் திறந்து வைத்த சுரங்கபாதை ஒரு மாதத்திலேயே பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளது.  உடனடியாக மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிரத்தரமாக மீண்டும் தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையொனில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றார்.

Tags : public ,railway tunnel ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...